நெல்லை மாவட்ட தேமுதிகவில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக மாவட்ட துணைச் செயலாளர் ஐயப்பன், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசேகர பாண்டியன் ஆகியோர் அவர்கள் வகித்து வந்த பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.