கோட்டை குளத்தில் மிதந்த ஆண் சடலம்
திண்டுக்கல் கோட்டை குளத்தில் மிதந்த ஆண் சடலம் - மீட்ட தீயணைப்புத் துறையினர்
திண்டுக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் ஆண் சடலம் மிதந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்புதுறையினர் கோட்டைகுளத்தில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர். நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இறந்த நபர் R.V. நகர் பகுதியை சேர்ந்த செல்வம்(45) என்றும் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தகவல்கள் தெரிய வந்தன.