நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நரிக்குடியில் 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ், ரூ.57.80 இலட்சம் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வக கட்டடத்தினையும், நரிக்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மறையூர் ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார். டி.வேலன்குடி ஊராட்சி, பட்டமங்கலம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 இலட்சம் மதிப்பில் வரத்துக் கால்வாய் தூர்வாரப்பட்டு வருவதையும், கொட்டகாட்சியேந்தல் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.28 இலட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டுமான பணிகளையும், கணையமறித்தான் கிராமத்தில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.67 கோடி மதிப்பில், புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.