சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சித்தாமூர் அடுத்த காட்டுதேவாத்துார் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.சித்தாமூர்-செய்யூர் சாலை ஓரத்தில் ஒரே வளாத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.அருகே உள்ள மாற்று இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக இரண்டு தளங்களுடன் கூடிய புதிய பள்ளிக் கட்டடம் அமைக்கப்பட்டு, தற்போது புதிய கட்டடத்தில் மாற்றப்பட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய பள்ளி கட்டடம் இருந்த இடம் பயன்பாடு இன்றி உள்ளது. விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில், குழந்தைகள் விளையாட பூங்கா வசதி இல்லை. ஆகையால் பழைய பள்ளி கட்டடத்தை அகற்றி விளையாட்டு உபகரணங்களான சறுக்கல், ஊஞ்சல் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன், சிறுவர் பூங்கா அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்