சோழதாசன் பட்டியில் மது போதையில் பிவிசி பைப் இணைக்க பயன்படுத்தும் பசையை கலந்து குடித்தவர் உயிரிழப்பு.
சோழதாசன் பட்டியில் மது போதையில் பிவிசி பைப் இணைக்க பயன்படுத்தும் பசையை கலந்து குடித்தவர் உயிரிழப்பு.
சோழதாசன் பட்டியில் மது போதையில் பிவிசி பைப் இணைக்க பயன்படுத்தும் பசையை கலந்து குடித்தவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா,அம்மாபட்டி அருகே உள்ள சோழதாசன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 53. இவர் அண்மை காலமாக மது போதைக்கு அடிமையாகி இருந்தார். இந்நிலையில் டிசம்பர் 28ஆம் தேதி இரவு 7:30- மணி அளவில், மது போதையில் இருந்த அவர், மீண்டும் மது அருந்தும் போது,PVC பைப் இணைப்பதற்காக பயன்படுத்தப்படும் பசையை கலந்து குடித்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பழனி சாமியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த பழனிச்சாமியின் மனைவி கமலாதேவி வயது 50 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.