குமரி : போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய முதல்வர்
திருவள்ளுவர் விழா
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, பள்ளி பயிலும் மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் அய்யன் திருவள்ளுவரின் பொருண்மைச் சார்ந்த கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் பிரிவில் வெற்றி பெற்று முதல் பரிசு வென்ற செல்வி ர. நேசிகா, இரண்டாம் பரிசு ர. மதுஜா, மூன்றாம் பரிசு ம.எ. சுபிஷா வுக்கும், இரண்டாம் பிரிவில் வெற்றி பெற்று முதல் பரிசு மு. சரண்யா பவானி, 2 -ம் பரிசு தரணிதரன், 3- ம் பரிசு நவீனா என மொத்தம் 21,500 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்தினார். மேலும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே மீக்குறும்படங்கள், திரைச்சுருளைகள் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் மீக்குறும்படங்கள் பிரிவில் முதலிடம் பெற்ற நித்யஸ்ரீ, திரைச்சுருளைகள் பிரிவில் முதலிடம் பெற்ற அக்சா, ஜோஸ்பின் ஆகியோருக்கும், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் சார்பில் மீக்குறும்படங்கள் பிரிவில் முதலிடம் பெற்ற வி. ஹரிஹரன், திரைச்சுருளைகள் பிரிவில் முதலிடம் பெற்ற நாகர்கோவில் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் – எஸ். ஹரிதா, ஆர். அபிநயா, எஸ். ஆன்டோ, சுதிக்சா, எஸ். நாராயணா மற்றும் செல்வி ஆகியோருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.