நடிகர் விஜய்யுடன் பாஜக கூட்டணியா? குஷ்பு பதில்.
மதுரை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்தார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று ( ஜன.3) காலை நடிகை குஷ்பூ பேட்டியளித்தார். தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்குவது கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் நடைபெற்றது தான் முதல் பிரச்சினை கிடையாது.. நாங்கள் பேசும்போது அரசியல் பண்ணுகிறீர்கள் என கூறுகிறார்கள்.. புதுக்கோட்டையில் நடைபெறும் போது ஏன் திமுக குரல் கொடுக்கவில்லை.. கன்னியாகுமரி நடந்த பிரச்சனையை பேசவில்லை.. மணிப்பூர் நடந்த பிரச்சனையை தெரியாமல் மு.க ஸ்டாலின் திமுகவினர் காங்கிரசினர் இருக்கிறார்கள். அவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலையில் பெண்கள் பாதுகாப்பு மையம் திறக்கிறீர்கள்.முதலில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெண்களுக்கு ஆண் கொடுமை நடந்தால் எந்த மாநிலம் நடந்தாலும் குரல் கொடுப்போம். பெண்ணுக்கு எதிராக செயலாக தான் பார்க்க வேண்டும் அங்குதான் அரசியல் பண்ணக்கூடாது.விஜய் மட்டுமல்ல எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.. எதிரியும் எதிரியும் நண்பன் என்பது போல் விஜயும் பாஜகவும் இணைய வாய்ப்புள்ளதா? என்று கேள்விக்கு அதை டெல்லியில் இருப்பவர்கள் தான் பதில் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.