கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்.
மதுரை திருமங்கலத்தில் கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜன.3) மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரின் திருவுருவப்படத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மதுரை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.