சந்தைப்பேட்டையில் ஆடுகள் விற்பனை ஜோர்
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் இன்று ஒரே நாளில் 36 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றது
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக சிறப்பு வார சந்தை நடைபெறுவது வழக்கம் ஜனவரி 5 இன்று காலை கூடிய வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால் ஆடுகள் வரட்டும் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 26,000 வரை விற்பனையானது. மேலும் சந்தை பேட்டையில் இன்று 36 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.