தென்காசி அருகே குற்றாலம் பீடாதிபதி சென்ற கார் விபத்து

குற்றாலம் பீடாதிபதி சென்ற கார் விபத்து

Update: 2025-01-03 08:48 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் மௌனசாமி மடத்தின் மேலாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 108 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீ சித்தேஸ்வரி பீட மகாசமஸ்தான ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் மௌன சுவாமி மடத்தின் பீடாதிபதியாக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பரமஹம்சர், பரிவ்ராஜகாச்சார்யா, ஜகத்குரு புனித ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வரானந்த பாரதி மகா சுவாமிகள் நேற்று(ஜன. 2) குற்றாலத்திலிருந்து திருப்பதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேலூர் அருகே சென்ற போது அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த சுவாமிஜி வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளார்.

Similar News