மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.
மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட அரசு பொருட்கள் விற்பனையி்ல் போலி ரசீது மூலம் பல கோடி மோசடி புகார்- மதுரை சிறைத்துறை எஸ்பி உள்ளிட்ட 11 பேர் மீது மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு மீதி இருந்த நிலையில் இன்று (ஜன.3) லஞ்ச ஒழிப்புத்துறையினர் மத்திய சிறைச்சாலையில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2016 முதல் 2021 வருடங்களில் மதுரை மத்திய சிறையிலிருக்கும் கைதிகள் மூலம் ஸ்டேஷனரி பொருள்களும், மருத்துவப் பொருள்களும் தயாரிக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாகப் போலி பில் தயாரித்து மோசடி நடந்திருக்கிறது. போலி ரசீது தயாரித்து பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் அப்பொழுது வெவ்வேறு கால கட்டங்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.. மேலும் சிறைக் கைதிகள் மூலம் அதிகமாகப் பொருள்களை உற்பத்தி செய்ததாகவும், அதற்காக அவர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுத்ததாகவும், போலிக் கணக்குகளை உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் இந்த மோசடி புகார் தொடர்பாக கணக்கு தணிக்கைதுறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தபோது 1 கோடி 63லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்களை விற்பனை நடைபெற்றதாக கூறப்பட்ட நிறுவனங்களில் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் நடத்திய விசாரணையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.. அதனடிப்படையில் மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடைபெற்ற நாட்களில் சிறைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஊர்மிளா (தற்போது கடலூர் மத்திய சிறையில் எஸ்பியாக உள்ளார்), மதுரை சிறையின் சிறை அதிகாரியும், தற்போது பாளையங்கோட்டை சிறை ADSP வசந்தகண்ணன், மதுரையில் பணியாற்றி, தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அதிகாரியாக உள்ள தியாகராஜன், மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ஜாபருல்லாகான் முகமது அன்சாரி, முகமது அலி, சென்னையை சேர்ந்த சீனிவாசன், சாந்தி, வெங்கடேஷ்வரி, நெல்லையை சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி உள்ளிட்ட 11 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்பொழுது மதுரை மத்திய சிறைச்சாலையில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையில் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு உண்டான கூடுதல் ஆவணங்கள் உள்ளனவா, மேற்கண்ட கால கட்டத்தில் பணிபுரிந்து வந்த பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.