அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
அரக்கோணத்தில் இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணம் டவுன் போலீசார் குற்றசம்பவங்களை தடுக்கும் வகையில் சப்- இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் பஜார், பழனிபேட்டை, எஸ்.ஆர்.கேட், ரயில் நிலை யம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகே ஓம்சக்தி கோவில் பகுதியில் போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த குருபிரசாத் (வயது 29) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுதத்து அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.