குற்ற செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறை
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி மேல கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன்(20). இவர் கொலை, கொலை முயற்சி, அடிதடி போன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோணமுத்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையில், கலெக்டர் உத்தரவின்படி சிவராமன் நேற்று (ஜனவரி 4) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.