தொப்பூர் மலைப்பாதையில் விபத்து ஒருவர் உயிரிழப்பு
தொப்பூர் அருகே லாரி, கார், கண்டெய்னர் லாரி என அடுத்தடுத்த வாகனங்கள் மோதிய விபத்தில், காரில் வந்தவர் உடல் நசுங்கி உயிரிழப்பு மூன்று பேர் காயம்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி சென்ற லாரி, கார், கண்டெய்னர் லாரி உள்ளிட்ட வாகனங்கள், ஒன்றோன்று அடுத்தடுத்த மோதிக் கொண்டது. இந்த விபத்தில் லாரிகளுக்கு இடையில் கார் சிக்கிக் கொண்டது. இதில் மகாராஷ்டிராவிலிருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்ற 4 பேரில் ஒருவர் வில்லியம்ராஜ் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிழந்ததார். மேலும் ராஜா, ரேணுகா, ஜெனிபர் ஆகிய மூன்று பேர் காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிக் கொண்ட காரை கிரேன் உதவியுடன் காவல் துறையினர் காரை மீட்டனர். இந்த விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தினார். இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.