அரசு பள்ளி மாணவர்களுக்கு கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் உதவித்தொகை
அரூரில் கொங்கு நாடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 35 ஆம் ஆண்டு விழாவில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 20 லட்சம் உதவி தொகை வழங்கல்.
தருமபுரி மாவட்டம் அரூரில் சென்னை கொங்குநாடு அறக்கட்டளையின் 35 ஆம் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த சமூக சேவைகள் செய்தவர்களுக்கு, அருட்செல்வர், காளிங்கராயன், கொங்குவேல், தீரன் சின்னமலை என பத்து வகையான விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களை கல்விக்கு உதவி தொகையாக 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. இதில் 130 மாணவர்களுக்கு 10 லட்சமும், அரசு பள்ளிகள் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 10 பள்ளிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் என மொத்தம் 20 லட்ச ரூபாய் கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரிவேணி குழும உரிமையாளர் பாலசுப்பிரமணியம், முத்து ராமசாமி, முன்னாள் அமைச்சர்கள் பி.பழனியப்பன், கே.பி.அன்பழகன், எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்