சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது.
மதுரை திருமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள நடுவக் கோட்டையை சேர்ந்த சின்னக்கருப்பு(24) என்பவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம் (ஜன.4) வழக்கம் போல் வேலைக்கு சென்று திரும்பிய போது 6 வயது சிறுமி தனியாக நடந்து வந்ததை பார்த்துள்ளார். அந்த சிறுமியிடம் பேச்சுக்கொடுத்த என்ன படிக்கிறாய் என கேட்டுள்ளார். உனக்கு மிட்டாய் வாங்கித்தந்து வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன் என அழைத்து சென்று, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, வாலிபர் சின்னக் கருப்புவை நேற்று( ஜன.5) கைது செய்து சிறையில் அடைத்தனர்.