கோவை: பள்ளி பேருந்து விபத்து - மாணவர்கள் காயம் !

பள்ளி பேருந்து வீரபாண்டி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆட்டோ மீது மோதி விபத்து

Update: 2025-01-06 10:39 GMT
கோவை, மேட்டுப்பாளையம், கோட்டை பிரிவு பகுதியில் உள்ள சாய் வித்யா நிகேதன் பள்ளி பேருந்து இன்று காலை வீரபாண்டி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசான காயங்கள் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News