திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளங்குளத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (52). இவர் மானூர் அருகே சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.