அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல். தடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்த பாமக நிர்வாகிகள்.
அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல். தடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்த பாமக நிர்வாகிகள்.
அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல். தடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்த பாமக நிர்வாகிகள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட, வெஞ்சமாங்கூடலூர் கீழ்பாகம், வெஞ்சமாங் கூடலூர் மேல்பாகம், திருமாணிக்கம்பட்டி, நந்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் தொடர்ந்து கிராவல் மண் சட்ட விரோதமாக லாரிகள் மூலம் கொள்ளையடிக்கப்படுவது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கரூர் மாவட்டம் சார்பாக, மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் தமிழ்மணி,கரூர் நகர செயலாளர் ஆகிய முருகேசன், பாமக இளைஞரணி செயலாளர் மலைமுத்து,கடவூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், மண் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும், கிராவல் மண் திருட்டுக்கு உடந்தையாக பயன்படுத்தப்படும் பர்மிட் மற்றும் ட்ரிப்சீட் ரசீது யாருடையது என்பதை அறிந்து, சம்பந்தப்பட்ட நபர்களின் குவாரி லைசன்சை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த நிலை தொடர்ந்தால் கரூர் மாவட்ட பாமக சார்பில் பொதுமக்கள் உதவியோடு கடத்தலில் ஈடுபடும் லாரிகளை பிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.