கோவை: இருசக்கர வாகன திருடன் கைது !
இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிவசுப்பிரமணியன் என்பவர் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்
கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிவசுப்பிரமணியன் என்பவர் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 5 ஆம் தேதி, பொள்ளாச்சி கோவில் பாளையத்தைச் சேர்ந்த முகமதுதாஹா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை ராமநாதபுரம் தனியார் பிரியாணி கடை முன்பு நிறுத்திவிட்டு உணவு அருந்த சென்றிருந்தார். திரும்பி வந்தபோது வாகனம் காணாமல் போனதை அறிந்து கோவை இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு நபர் முகமதுதாஹாவின் இருசக்கர வாகனத்தை திருடுவதைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், திருடன் சிவசுப்பிரமணியன் என்பதும், இவர் ஏற்கனவே பல்வேறு இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.சிவசுப்பிரமணியன் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.