கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா சிறப்பு மருத்துவ முகாம்!
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையம் முன்பு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது இதில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் தூத்துக்குடி 14வது வார்டு சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி விஎம்எஸ் நகர் தனியார் பள்ளியில் நடந்தது இந்நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன் தலைமை தாங்கினார் தூத்துக்குடி மாநகர திமுக துணைச் செயலாளர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் கீதா எம் முருகேசன் வரவேற்று பேசினார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் மருத்துவ முகாமில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை தூத்துக்குடி வாசன் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து மருத்துவ சேவை செய்தனர் இதில் 300-க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை முகாம் செய்தனர் மேலும் பொது மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக இசிசி எடுக்கப்பட்டது முகாமில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம். ராஜ் மோகன் செல்வின் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மகளிர் அணி செயலாளர் கவிதா தேவி, மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, வட்ட செயலாளர்கள் கதிரேசன்,செல்வராஜ். சுரேஷ் பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ். ஜெயக்குமார், ரவீந்திரன். ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார். மேகநாதன் .திமுக நிர்வாகிகள் அந்தோணி முத்துராஜ், ஞானக்கண் ராஜதுரை சுயம்பு விஜயகுமார் பட்சிராஜ் முருகேசன் ஆட்டோ குமார் சங்கர் படையப்பா முனியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்