தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு கிராம மக்கள் போராட்டம்
சங்கரன்கோவிலில் கிராம மக்கள் போராட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட சென்னிகுளம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக சரியாக வேலை வழங்குவதில்லை எனவும், முறைப்படி தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் கிராம மக்கள் பல பேருக்கு வேலை இல்லாமல் திரும்பிச் செல்லும் நிலையால் அவதிப்பட்டு வந்தனர். இதனை கண்டித்தும் உடனடியாக கிராமத்தில் 100 நாள் வேலையில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு முறைப்படி அனைவருக்கும் வேலை வழங்கிட கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இததை தொடர்ந்த ஊழியர்களிடம் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து உடனடியாக இந்த பகுதிக்கு அதிகாரிகள் ஆய்வு செய்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்று வரும் பணியாளர்களுக்கு முறையாக வேலையும் சம்பளமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை எடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழலை ஏற்பட்டது.