தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தமிழக வெற்றி கழகம் நிறுவன தலைவர் விஜய் ஆணைப்படி தூத்துக்குடி 31 வது வார்டு தமிழக கட்சி கழகம் சார்பில் இலவசமருத்துவ முகாம் தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெரு காளியம்மன் கோவில் விளக்கத்தில் நடந்தது. முகாமிற்கு தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் அஜிதா அஜிதா ஆக்னஸ் தலைமை தாங்கி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதில், பிவெல் மருத்துவமனை டாக்டர் கலைச்செல்வன் தலைமையிலான குழுவினர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மருத்துவ முகாமில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.