கோவை: தொழிலாளர் முன்னணி சார்பில் பொதுக் கூட்டம் !

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் கோவை சிவானந்தா காலனியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2025-01-06 11:12 GMT
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவிடத்தில், தியாகிகளை நினைவு கூறும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவானந்தா காலனையில் ஒதுங்காதே ஒன்று சேர், புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பை நிறைவேற்ற விடாதே என்ற முழக்கங்களை முன் வைத்து பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இளம் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புகள் இல்லாமலும், கார்ப்பரேட் கம்பெனிகளில் வெறும் 2 ஆண்டுகள் நீம், நாகப்ஸ், டிரெயினி மற்றும் ஃபிக்சட் டைம் பயிற்சியாளனாக மட்டுமே வேலை செய்து வெளியேற்றப்படுவதற்கு சட்டத் திருத்தம் வழி வகை செய்கிறது. இதற்கு எதிராகவும், சங்கம் வைத்தல், ஆலை மூடல் கார்ப்பரேட் முதலாளிக்கு ஆதரவாகவும் மாற்றப்பட்டு உள்ள சட்டத் திருத்தங்கள் இளம் தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு எதிராக இருப்பதை நீக்கக் கோரவும், ஆலை மூடலில் அரசு அனுமதி கோர வேண்டாம் என்ற விதியை மாற்றவுமான அனைத்து தொழிற் சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியும் ஜனநாயகப் பூர்வமான வேண்டுகோளை அரசிற்கு கோரிக்கையாக வலியுறுத்தி முன் வைத்தனர்.

Similar News