கனிமொழி எம்பி பிறந்த நாள்: அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து
கனிமொழி எம்பி பிறந்த நாள்: அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தனர்
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தி.மு.க., துணைப் பொதுச்செயலரும், தூத்துக்குடி எம்பியும், பாராளுமன்ற தி.மு.க., குழுத் தலைவருமான கனிமொழி, இன்று தன் 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை, தன் அண்ணன் முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து, வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆழ்வார்பேட்டை இல்லத்தில், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சரின் கணவர், திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப் உடனிருந்தார்.