கோவை: வளர்ந்த நாடாக மாற பெண்களின் பங்களிப்பு அவசியம் !
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்பூர்ணாதேவி கலந்து கொண்டார்.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்களின் பங்கு முக்கியமானது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்பூர்ணாதேவி தெரிவித்துள்ளார்.கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா சுயசார்பு நோக்கில் செயல்பட்டு வருவதாகக் கூறினார். 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நிறைவேற்ற அனைத்துத் துறைகளிலும் பெண்களின் தீவிர பங்களிப்பு அவசியம் என வலியுறுத்தினார்.கடந்த 2020-ல் செயல்படுத்தப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண்கள் எடுத்த 83 மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.மொத்தம் 2472 மாணவியர் பட்டம் பெற்றனர்.