தென் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான களரிக் கலைக்கான தேசிய அளவிலான போட்டி குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் உட்பட 8 மாநிலங்களை சேர்ந்த 7 வயது முதல் 70 வயது வரையிலான ஆண்கள் பெண்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என மூன்று பிரிவுகளாக சிலம்பம், வாள் வீச்சு, சுவடு வைத்தல், உள்ளிட்ட போட்டிகள் காலை முதல் துவங்கி மாலை வரை நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களுக்கு மெடல்கள் மற்றும் கோப்பைகள் பரிசுகளாக வழங்கப்பட்டது. இதனை காண குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.