இறைச்சிக் கழிவுடன் வந்த வாகனம் பறிமுதல்

ஆறு காணி

Update: 2025-01-06 11:31 GMT
குமரி மாவட்டம் ஆறுகாணி பகுதியில் பன்றி பண்ண அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையை சம்பந்தப்பட்ட பன்றி  பண்ணைக்கு இன்று 6-ம் தேதி  காலை சரக்கு வாகனத்தில் கேரள மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வரப்படுவதாக ஆறுகாணி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.       அதன் பேரில் போலீசார் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை பேணு என்ற பகுதியில் தடுத்து நிறுத்தி பின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாதத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை கைது செய்தனர்.       பிறகு சரக்கு வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.   இறைச்சிகளை ஏற்றி வந்து பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் எல்லை பகுதி சோதனை சாவடிகளை  கடந்து வந்ததா?  அல்லது வேறு வழியாக வந்தா? என விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Similar News