ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக விழிப்புணர்வு
டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஏமாற வேண்டாம்-காவல்துறை சார்பாக விழிப்புணர்வு
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், கொரியரில் உங்களது பெயரில் பார்சல் அனுப்பி இருப்பதாகவும், அதில் போதைப் பொருள் இருப்பதாகவும் கூறி, உங்களை காவல் அதிகாரியிடம் இணைப்பதாக கூறுவர், பின் காவல் அதிகாரி உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து இருப்பதாக மிரட்டி, உங்களிடமிருந்து பணத்தை பறிக்க வாய்ப்புள்ளதால், இது போன்ற மோசடி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.