சிலம்ப போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் மதுரா செந்தில்.

சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் MD மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.M.மதுரா செந்தில் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Update: 2025-01-06 15:29 GMT
ETERNAL SPORTS ACADEMY இன் சார்பில் மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் - செங்குந்தர் திருமண மண்டபம் குமாரமங்கலம் திருச்செங்கோட்டில் 05/01/2025 ஞாயிற்றுக்கிழமை அகாடெமி தலைமை பயிற்சியாளர் திரு சிந்தியா கே பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவு முதல் 22 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 8 பிரிவுகளில் - குத்து வரிசை, ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, வேல் கம்பு, மான் கொம்பு, ஒற்றை சுருள்வாள், இரட்டை சுருள்வாள், வாள் கேடயம், தொடுபுள்ளி போன்ற பல்வேறு போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக குட்டி ஸ்பின்னிங் மில் மற்றும் ஜோதி அமார்ஜோதி திரையரங்கம் உரிமையாளர் குணசேகரன் , V School தாளாளர் மா.அன்பழகன் , குமாரமங்கலம் நாட்டாண்மைக்காரர் A.வடிவேல் , குமாரமங்கலம் முன்னாள் நாட்டாண்மைக்காரர் S. சுப்ரமணியம் அவர்கள், ஈரோடு கலைத்தாய் E.R.சண்முகசுந்தரம் மாஸ்டர் , தமிழ்நாடு சிலம்ப்பாட்ட கழக நாமக்கல் மாவட்ட செயலாளர் S.சக்திவேல் மாஸ்டர் l, விஷ்ணு வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர் R. கார்த்திகா M.E. B.ED ஆகியோர் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தனர். மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு T.O. சிங்காரவேலு அவர்கள் சிலம்பம் கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை அனைத்து மாணவ மாணவிகளும் கற்றுக் கொள்வது அவசியம் என கேட்டுக்கொண்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.இந்த போட்டியில் கலைத் தாய் சிலம்ப அறக்கட்டளையில் இருந்து சிறப்பாக பணியாற்றிய நடுவர்கள் மாநில, மாவட்ட அமைப்புகளின் விதிமுறைகளின்படி வயது மற்றும் எடை பிரிவின் அடிப்படையில் போட்டிகளை நடத்தினர்.மேலும் குமாரமங்கலம் vice president S.பாஸ்கரன் ESA தலைவர், வினோத் சிவன் அவர்கள் ESA தொழில்நுட்பப் பிரிவு, கோபிகிருஷ்ணன்,கனிஷ்கா, முத்துகுமார், சிந்து பைரவி, மற்றும் தன்னார்வலர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் சிலம்பதில் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என பாராட்டி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் MD , நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.M.மதுரா சேந்தில் , எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு K செல்வராஜ் அவர்கள் ஆகியோர் சிலம்ப விளையாட்டு தமிழ்நாடு அரசு சார்பாக கிராமப்புறங்களிலும் சிறுவயதனர்களும் கொண்டு சேர்க்கும் வகையில் பல திட்டங்கள் வகுத்துள்ளதாகவும் அனைவரும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது அவசியம் எனவும் விழிப்புணர்வு வழங்கினார். மேலும் ஐந்து வயது முதல் உள்ள குழந்தைகள் அனைவரும் தற்காப்பு கலை போட்டியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வெற்றிபெற்ற மாணவ மாணவிகளை போட்டியினை சிறப்பித்தார்.

Similar News