காரமடை: மண்ணுளி பாம்பு பிடிபட்டது !

காரமடை அருகே குருந்தமலை அடிவாரத்தில் ஒரு விவசாய தோட்டத்தில் காணப்பட்ட மண்ணுளி பாம்பு.

Update: 2025-01-08 05:07 GMT
காரமடை அருகே குருந்தமலை அடிவாரத்தில் ஒரு விவசாய தோட்டத்தில் மண்ணுளி பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள், உடனடியாக நேற்று காரமடை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், சுமார் 1½ அடி நீளமுள்ள அந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்து பில்லூர் அணை செல்லும் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். மண்ணுளி பாம்பை அங்கு இருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

Similar News