பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
ராப்பத்து திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என தரிசனம்;
பெரம்பலூர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசிராப்பத்துநிகழ்வின் முக்கியமான ஆழ்வார் மோட்சம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் நேற்றிரவு 7.30மணிளவில் நடைபெற்ற ஏகாதேசி திருவிழாவில் இராப்பத்து நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான இராப்பத்தின் 10ம் நாள் ஆழ்வார் மோட்சம் நிகழ்வு நடைபெற்றது. பெருமாள் தோரா கிரீடம் அலங்காரத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக அக்ரஹாரம் தெருகடந்து கம்பத்து ஆஞ்சநேயரை மூன்று முறை வலம் வந்து திருக்கோவிலை அடைந்து ஆழ்வார்களுக்கு மற்றும் பக்தர்களுக்கும் மோட்சம் அளித்தார். இந்நிகழ்வை காணும் பக்தர்கள்மற்றும் அனைவரும் மோட்சம் கிடைப்பது என்பது ஐதீகம் பூஜைகளை பட்டாவி பட்டாச்சியார் செய்து வைத்தார் நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் கோவிந்தராஜ் சரவணன் குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெற்றனர்.