மனநலம் பாதிக்கப்பட்டவரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
பெரம்பலூர் நகரில் மனநலம் பாதிக்கப்பட்டுசுற்றித்திரிந்த நம்பரை குணப்படுத்தி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.;
பெரம்பலூர் மாவட்டம் பத்தாண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் தங்கியிருந்த மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த போ.ராம்லால் குணமடைந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் அவரது குடும்பத்தினரை கண்டறிந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் ஒப்படைத்தார். மத்திய பிரதேசம் மாநிலம் சட்னா மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ராம்லால் த/பெ போலோ (வயது 59), என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிப்படைந்த நிலையில் சுற்றித்திரிந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் மூலம் பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டு கருணை இல்லங்களில் தங்கியிருக்கும் நபர்களுக்காக தமிழ்நாடு அரசு வழங்கி வரும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையின் மூலம் இவருக்கான அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட்டு வந்தது. மேலும், இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் சார்ந்த பயிற்சிகளும், மருத்துவ சேவைகளும் அளித்து வந்த நிலையில் அவர் குணமடைந்தார். அதன் பின்னர் அவர் தம்முடைய பூர்வீகம், குடும்ப உறுப்பினர்கள், வீட்டு முகவரி போன்ற விபரங்களை தெரிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மூலமாக அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், திரு.ராம்லால் அவர்களின் மகனான சஞ்சய் குமார் தன்னுடைய தந்தையின் அடையாளங்கள், மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சான்றுகளை வழங்கியதில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வேலா கருணை இல்லத்தில் தங்கி இருந்த ராம்லால் அவர்கள மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் அவருடைய மகனான சஞ்சய் குமார் அவர்களிடம் இன்று (20.1.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக தன்னுடைய தந்தையை பாதுகாப்பாகவும், மருத்துவ சேவை உள்ளிட்ட உதவிகளை வழங்கி பராமரித்து வந்த தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், வேலா கருணை இல்ல நிர்வாகிகளுக்கும் திரு.சஞ்சய் குமார் அவர்கள் தன்னுடைய குடும்பத்தின் சார்பாக மனம் உருகி நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சு.சொர்ணராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், வேலா கருணை இல்ல நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.