சார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்த விசிக நிர்வாகிகள்
நீண்டகாலமாக பயன்படுத்திய பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு;
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பொன்னகரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த நடைபாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளார்.. அதனை ரத்து செய்ய வேண்டியும், தலித் மக்களுக்கு நிரந்தரமாக பாதையை உறுதிபடுத்த வேண்டியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.கலையரசன் தலைமையில் ஊர் முக்கியஸ்தர்கள் உடன் மாவட்ட சார் ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வில் மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் மு.உதயகுமார் . பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் (கிழக்கு) சி.பாஸ்கர் . பெரம்பலூர் (மேற்கு) ஒன்றிய செயலாளர் எம்.பி.மனோகரன். பொன்னகரம் கிளை செயலாளர் பிரபாகரன். உட்பட கிராம பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்