சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார். அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், தொட்டிலோவன்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.54 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர், கஞ்சம்பட்டி ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு வீடு திட்டத்தின் கீழ், புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், குமாரபுரம் ஊராட்சியில், கனிம வள நிதியின் கீழ், ரூ.16.75 இலட்சம் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும் மற்றும் குமாரபுரம் ஊராட்சியில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மதிப்பில், சமுதாய சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பணியினையும், பின்னர், சங்கரநத்தம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.20 இலட்சம் மதிப்பில் குளம் தூர்வாரப்பட்டு கரை உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.