சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு பதிவு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக சிஐடியு சார்பில் பட்டாசுகள் வெடித்து இணிப்புகள் வழங்கி கொண்டாட்டம்*
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு பதிவு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக சிஐடியு சார்பில் பட்டாசுகள் வெடித்து இணிப்புகள் வழங்கி கொண்டாட்டம்*;
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு பதிவு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக சிஐடியு சார்பில் பட்டாசுகள் வெடித்து இணிப்புகள் வழங்கி கொண்டாட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் சாம்சங் தனியார் ஆலை செயல்படுகிறது. அங்கு பணியாற்றும் 1000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஊதிய உயர்வு, தொழிற் சங்கத்துக்கு அங்கீகாரம், போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு பதிவு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக சிஐடியு சார்பில் பட்டாசு வெடித்து இணிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் சிஐடியு நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.