தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தை அமாவாசையை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.;

Update: 2025-01-29 17:37 GMT
ஆண்டுகளில் வரக்கூடிய மூன்று அமாவாசைகளில் சிறப்பு வாய்ந்தது தை அம்மாவாசை இந்த தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து திதி கொடுப்பதால் முன்னோர்கள் எப்போதும் நம்மை பாதுகாத்துக் கொள்வார்கள் என்று ஐதீகம். அதனால் இந்த தை அமாவாசையில் முன்னோர்களை வழிபட உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் அதிகாலை முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்தனர் . மேலும் பக்தர்கள் தங்களுடைய முன்னோர்களை நினைத்து வாழைக்காய் ,புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் தேங்காய், அரிசி எள் வாழைப்பழம் வெற்றிலை சீவல் முதலானவற்றை வாழை இலையில் வைத்து முன்னோர்களுக்கு படைத்து, கோவிலில் அமைந்துள்ள தீர்த்தக்குளத்தில் குளித்து திதி கொடுத்தனர். இந்த சிறப்பு வாய்ந்த தை அம்மாவாசையில் 500க்கு மேற்பட்ட பக்த கோடி பெருமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

Similar News