அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு 6 வது நாளாக அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம்..;

Update: 2025-01-31 12:34 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு 6 வது நாளாக அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம்.. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 7500 க்கும் மேற்பட்ட அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 25 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில வருடங்களாக அரசு கல்லூரிகளின் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும் ஊதிய உயர்வு 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.உயர் நீதிமன்றம் பணி நிரந்தரம் மற்றும் யூசிஜி பரிந்துரைத்த ஊதிய உயர்வு 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஸ்டாலின் அரசு கண்டுகொள்ளாமல் மெத்தனப்போக்கில் செயல்படுவதால் தமிழக முழுவதும் அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் ஆறாவது நாளாக போராட்டங்கள் நடத்தி இன்று மனித சங்கிலி போல் கைகோர்த்து சாலைகளில் நடந்து சென்று ஸ்டாலின் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதார போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

Similar News