ஸ்ரீ மார்நாடு கருப்பசாமி கோவிலில் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது*

ஸ்ரீ மார்நாடு கருப்பசாமி கோவிலில் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது*;

Update: 2025-01-31 12:37 GMT
விருதுநகரில் ஸ்ரீ மார்நாடு கருப்பசாமி கோவிலில் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது விருதுநகர் சின்ன பேராலி கிராமத்தில் ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ சங்கிலி கருப்பு ஸ்ரீ மார்நாடு கருப்பு சேமங்குதிரை அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கான விழா ஏற்பாடுகள் தொடங்கினர் நேற்றும் பல பூஜைகள் நடைபெற்ற நிலையில் கும்பாபிஷேகத்திற்கான நிகழ்வு இன்று காலை 6:00 மணி அளவில் மங்கள இசை உடன் தொடங்கியது அதைத் தொடர்ந்து நான்காம் காலயாக வேள்வி ஆரம்பிக்கப்பட்டது பூர்வாங்க பூஜை சாமிகளுக்கும் ரக்க்ஷா பந்தனம், கோ பூஜை லட்சுமி பூஜை நாடிசந்தனம் வேதபாராயணனம் திரவ்யா ஹீதி மூலமந்திர ஹோமம் பூர்ணா ஹீதி தீபாராதனை திருமுறை ஆசீர்வாதம் கடம் புறப்பாடு ஆலயம் வருதல் அதைத் தொடர்ந்து சேமக்குதிரைகளுக்கு மற்றும் கோவிலுக்கு தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது

Similar News