முத்துராமலிங்கதேவரின் உதவியாளரும், பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குருசாமி பிள்ளை அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் அனுசரிப்பு

முத்துராமலிங்கதேவரின் உதவியாளரும், பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குருசாமி பிள்ளை அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் அனுசரிப்பு;

Update: 2025-01-31 12:42 GMT
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தேவர் சிலை அருகே முத்துராமலிங்கத் தேவரின் உதவியாளர் குருசாமி பிள்ளை அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மாநில இளைஞரணி அமைப்பாளர் சப்பாணி முருகன் கலந்து கொண்டு முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், குருசாமி பிள்ளை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க தலைவர் நல்ல முத்து, ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் லெட்சுமணன், விருதுநகர் மாவட்ட தலைவர் பசுபதி பாண்டியன், ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் இளையமறவன் முனீஸ்வரன், இராமநாதபுரம் மாவட்ட துணை செயலாளர் முருகன், விருதுநகர் மாவட்ட அமைப்புச் செயலாளர் மா.அய்யனார் மற்றும் ஒன்றியதலைவர் முத்துச்செல்வம், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் காமேஷ் சேதுபதி, திருச்சுழி, அருப்புக்கோட்டை அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News