மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது
டைனமிக் ஏர்கன் கிளப் சார்பாக இரண்டு நாட்கள் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டி - வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரோசல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி ஜெயமுருகன் பரிசுக்கான கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள்...*;
விருதுநகரில் டைனமிக் ஏர்கன் கிளப் சார்பாக இரண்டு நாட்கள் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டி - வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரோசல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி ஜெயமுருகன் பரிசுக்கான கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள்... விருதுநகர் பேராலி சாலையில் அமைந்துள்ள டைனமிக் ஏர்கன் கிளப் சார்பாக துப்பாக்கி சுடும் போட்டி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழக முழுவதிலும் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் 180 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பத்து மீட்டர் தொலைவில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரோசல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ஜெயமுருகன் பரிசுக் கோப்பைகளையும், அதற்கான சான்றிதழையும் வழங்கினார்கள்