ரெங்கநாதர் கோவிலுனுள் உள்ள வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் - பக்தர்கள் பரவசம்...*
ரெங்கநாதர் கோவிலுனுள் உள்ள வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் - பக்தர்கள் பரவசம்...*;
விருதுநகர் உள்ள ரெங்கநாதர் கோவிலுனுள் உள்ள வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் - பக்தர்கள் பரவசம்... விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் மிகவும் பழமையான ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய வளாகத்திற்குள் 20க்கும் மேற்பட்ட வேப்பமரங்கள் உள்ளன .பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்பதால் சனிக்கிழமை தோறும் பக்தர்கள் அதிகமாக வந்து பெருமாளை தரிசித்து செல்வது வழக்கம். வழக்கம். போல் இன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசிக்க வந்தவண்ணம் இருந்தனர். அப்பொழுது கோவில் வளாகத்தினுள் உள்ள ஒரு வேப்ப மரத்தில் பால் வடிவதாக தகவல் வந்ததை அடுத்து பக்தர்கள் சென்று பார்த்த பொழுது வேப்பமரத்தில் பால் வடிந்துள்ளது. இதைப் பார்த்த பக்தர்கள் அந்த வேப்பமரத்தை பரவசத்துடன் சாமிதரிசனம் செய்த வண்ணமாக இருக்கின்றனர்