நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் - உ. வாசுகி.

அரசியல்;

Update: 2025-02-02 05:55 GMT
நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் - உ. வாசுகி.
  • whatsapp icon
நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் டெல்டா மண்டல மாநாட்டில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: நுண் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனம் அடக்கப்பட வேண்டும். அந்நிறுவனங்கள் விதிக்கிற அபரிமிதமான வட்டியைக் குறைக்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்களின் செயல்களால் பல பெண்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனா். இந்நிறுவனங்களை ஒழுங்குபடுத்த ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே சட்டம் உள்ளது. கா்நாடகத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மாவட்ட ஆட்சியரகத்தில் நுண் நிதி நிறுவனங்கள் தொடா்பான குறை தீா்க்கும் பிரிவையும், உதவி மையத்தையும் உருவாக்க வேண்டும். கடன் கொடுப்பதைத் தமிழக அரசு எளிதாக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்தால், நுண் நிதி நிறுவனங்களை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த மாநாட்டில் கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலத் தலைவா் எஸ். வாலண்டினா, மாநிலச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி, மாநிலச் செயற் குழு உறுப்பினா்கள் டி. லதா, வி. மேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாநிலக் குழு உறுப்பினா் ஆா். கலைச்செல்வி வரவேற்றாா். நிறைவாக, மாவட்டச் செயலா் இ. வசந்தி நன்றி கூறினாா்

Similar News