பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தில் தெய்வாங்கப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகம்;
பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தில் தெய்வாங்கப் பெருமாள்,காமாட்சியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கான குடமுழுக்கு செய்வதற்காக திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் கால யாக பூஜைகள் தொடங்கி இரண்டாம் காலம், மூன்றாம் கால பூஜைகள்,நான்காம் காலம் ஐந்தாம் காலம் பூஜைகள் நடைபெற்றது, தொடர்ந்து நேற்று தெய்வாங்கப் பெருமாள், காமாட்சியம்மன், மற்றும் பரிவார மூர்த்திகள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள்,பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் சந்திரசேகர், செங்கமங்கலம், அம்மையாண்டி, மாவடுக்குறிச்சி கிராமத்தார்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.