பதவி உயர்வுக்கான ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டங்கள் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இளநிலை உதவியாளர் பணியில் இருந்து பதவி உயர்வு ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.;
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் 2022-2023ஆம் ஆண்டிற்கு 3 ஊராட்சி செயலர்களுக்கு, இளநிலை உதவியாளர் பணியிடத்தில் பதவி உயர்விற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். இக்கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.