மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்.;
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிடம் விருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.