தைப்பூசத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்..
திருவாரூர் மாவட்டம் என்கண் சுப்ரமணிய சுவாமி முருகன் ஆலயத்தில் தைப்பூச நிகழ்வு வெகுமார்சையாக கொண்டாடப்பட்டது ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.;
திருவாரூர் மாவட்டம் என்கண் முருகன் ஆலயத்தில் தை பூசத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முருகன் ஆலயங்களில் எண்கண்ணில் உள்ள சுப்ரமணிய சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்குள்ள முருகப் பெருமானின் மூலவர் சிலை கட்டைவிரல் இல்லாமல் கண் தெரியாத சிற்பியினால் வடிவமைக்கப்பட்டு பின்னர் அவர் பார்வை பெற்றதாக கோயில் வரலாறு கூறுகிறது. இந்த ஆலயத்தில் தைப்பூசத்திருவிழா இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.