முருகன் ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..
திருவாரூர் மாவட்டம் என்கண் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்..;
திருவாரூர் மாவட்டம் என்கண் முருகன் ஆலயத்தில் தை பூசத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முருகன் ஆலயங்களில் எண்கண்ணில் உள்ள சுப்ரமணிய சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்குள்ள முருகப் பெருமானின் மூலவர் சிலை கட்டைவிரல் இல்லாமல் கண் தெரியாத சிற்பியினால் வடிவமைக்கப்பட்டு பின்னர் அவர் பார்வை பெற்றதாக கோயில் வரலாறு கூறுகிறது. இந்த ஆலயத்தில் தைப்பூசத்திருவிழா இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தைப்பூச நிகழ்வில் குடவாசல், அம்மையப்பன், செம்மங்குடி, காப்பணாமங்கலம், பூங்காவூர், தலையாலங்காடு போன்ற பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் செடில் காவடி, தோள் காவடி, பால்குடம் காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினார்.