நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் குறித்து அவதூறு பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
மார்க்ஸ் அம்பேத்கர் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே சமூக செயல்பாட்டாளர் சிமா. மகேந்திரன் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியாரை அவதூறாக பேசி வரும் சீமானை கண்டித்து திருவாரூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் மார்க்ஸ் அம்பேத்கர் பெரியார் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டினார். இந்நிகழ்வில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு மற்றும் நகரச் செயலாளர்கள் பங்கேற்றனர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.