ஆவுடையானூரில் குப்பைகளுக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் அவதி
குப்பைகளுக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் அவதி;
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள ஆவுடையானூர் குளக்கரையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் இன்று இன்று காலை குவிந்து கிடந்த குப்பையில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு குப்பைகளை கொட்டுவோர் மீதும், தீ வைத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.